பொதுஜன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டுமாயின் இப் பகுதியையும் தென்பகுதி போல் அபிவிருத்தியடையச் செய்யமுடியும்.
இதற்காக சகல மக்களும் ஒன்றிணைந்து இத் தேர்தலில் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினருமான அகமது சுல்தான் சுப்யான் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கினை இந்த அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் விரைவாகக் கட்டியெழுப்பியுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டுள்ளனர். இந்த ஐக்கியத்தின் ஊடாக வடக்கு மாகாணம் பல்வேறு வழிகளிலும் அபிவிருத்தியடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கினை அபிவிருத்தி செய்வதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.
அவருடன் இணைந்து பணியாற்றுகின்ற அமைச்சர்களும் இப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப் பகுதியில் அபிவிருத்திகள் நடைபெறவேண்டுமாயின் இந்த அரசாங்கத்தினை நாம் வடக்கில் ஆட்சி அமைக்க செய்யவேண்டும். வடக்கில் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக நாம் இப் பகுதியை முழுமையாகக் கட்டியெழுப்ப முடியும்.
தமிழர், முஸ்லிம்கள் என்ற இனவேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் இத்தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டும். சரியாகவர்களைத் தெரிவுசெய்வதன் ஊடாக இப்பகுதியை மீளக்கட்டியெழுப்ப முடியும். எனவே போரால் பாதிப்படைந்துள்ள இப் பகுதியைக் கட்டியெழுப்பி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாம் அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment