மத்திய, வடமேல் மாகாணங்களுடன் ஒப்பிடும் போது இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்கள் வடக்கில் காணப்படவில்லை என்றும் ஆங்காங்கே ஓரிரு வாகனங்களை மாத்திரமே தமது அமைப்பினர் அவதானித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கென இம்முறை 20,000 க்கும் மேற்பட்டோர் தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதுடன் அவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்களை நடாத்த அச்சம் கொண்டிருக்கலாம். இருந்தும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்நிலை மாறலாம் எனவும் ‘கபே’ அமைப்பின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment