ஐந்து தொகுதிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெல்லும் எனவும் 6 தொகுதிகளில் போட்டி காணப்படும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் சுதந்திரமாக முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பின்படி வட மேல் மாகாணத்தில் ஐ. மு. சு. மு. பெரு வெற்றியீட்டும் எனவும் 60 வீதத்திற்கு மேல் வாக்குகள் பெறப்படும் எனவும் கணிப்பீட்டின் மூலம் தெரிய வந்துள்ளது.
மத்திய மாகாணத்தில் உள்ள 21 தொகுதிகளில் 20 இல் ஐ. ம. சு. மு. வெல்லும் எனவும் ஒரு தொகுதியில் மட்டும் ஐ. தே. க. வுடன் போட்டியிருக்கும் என்றும் அறிய வருகிறது.
வடக்கில் உள்ள 14 தொகுதிகளில் 4 தேர்தல் தொகுதிகளில் ஐ. ம. சு. மு. வெல்வது உறுதியாகியுள்ளதோடு ஐந்து தொகுதிகளில் ஐ. ம. சு. முவை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது. 5 தொகுதிகள் தொடர்பில் உறுதியற்ற நிலையே காணப்படுவதாகவும் தேர்தல் தினமாகையில் அதில் மாற்றம் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அலஹப்பெரும,
தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட முதலாவது கருத்துக் கணிப்பீடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கணிப்பீடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் நடத்தப்பட்ட இந்த கணிப்பீட்டின் படி, வட மேல் மாகாணத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 60 வீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று ஐ. ம. சு. மு. வெற்றியீட்டும். மத்திய மாகாணத்தில் உள்ள 21 தொகுதிகளில் ஒரு தொகுதியிலே ஐ. தே. க.வுடன் போட்டியிருக்கும்.
வடக்கில் 5 தொகுதிகளில் ஐ. ம. சு. மு. வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் போட்டிருடுக்கும். இரு கட்சிகளுக்கும் சம வாய்ப்பு இங்குள்ளது.
“சந்தோசத்தையும், சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்” என்ற எமது தேர்தல் தொனிப் பொருளை வடக்கு மக்களும் அரவணைத்து இந்தத் தொகுதிகளிலும் எம்மை வெல்ல வைப்பர் என்று நம்புகிறோம். ஏனைய பிரதேச மக்களைப் போன்று அவர்களும் எமக்கு ஆதரவு வழங்குவர் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment