Home » , » மகிந்த தேசப்பிரிய, விக்னேஸ்வரனிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்

மகிந்த தேசப்பிரிய, விக்னேஸ்வரனிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்

ஜனாதிபதிக்குச் சில விடயங்களை முன்மொழிய மாத்திரமே சட்டம் இடம் கொடுத்திருக்கின்றது என இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம் பெற்ற அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினரை இராணுவ முகாம்களுக்கு முடக்குமாறும் அதற்கான அதிகாரங்கள் தேர்தல் ஆணையாளருக்கு உண்டு எனவும் தான் கொண்டு சென்றிருந்த சட்டப் புத்தகங்களிலுள்ள பல்வேறு கருத்துக்களையும் ஆதாரமாகக் காட்டியதுடன் விளக்கமும் அளித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் சட்ட விளக்கத்தை மிகவும் பொறுமையாகச் செவிமடுத்த தேர்தல் ஆணையாளர், விக்னேஸ்வரன் அவர்களே, நீங்கள் எவ்வளவோ பெரிய மனிதன் உங்களுக்கு நிறையச் சட்டம் தெரியும்.

ஆனால் தேர்தல் ஆணையாளராகிய என்னால் ஜனாதிபதிக்குச் சில விடயங்களை முன்மொழிய மாத்திரமே சட்டம் இடம் கொடுத்திருக்கின்றது என்பது சட்ட மேதையான உங்களுக்குத் தெரியாதா? எனக் கேட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com