Home » » எந்தவொரு வேட்பாளருக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது

எந்தவொரு வேட்பாளருக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது

எந்தவொரு வேட்பாளருக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

 வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கோரியுள்ளார். எனினும், இவ்வாறு வேட்பாளர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் நந்த மல்லவாரச்சி தெரிவித்துள்ளார்.

 ஒரு வேட்பாளருக்கு மட்டும் அவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட முடியாது. அவ்வாறு செய்தால் ஏனையவர்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்க நேரிடும். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரிடம் குறிப்பிட்டதாக மல்லவாரச்சி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com