Home » » கிளிநொச்சியில் தேர்தல் விதிகளை மீறுகின்றனர் அரச தரப்பினர்

கிளிநொச்சியில் தேர்தல் விதிகளை மீறுகின்றனர் அரச தரப்பினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச தரப்பினரால் தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 கண்டாவளை புளியம்பொக்கணையில் சமூர்த்தி வங்கிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று குரல்கள் எழுப்பியுள்ளனர்.

 இதேவேளை கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தமிழ் விழா என்ற பெயரில் மேற்படி அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பரிவாரங்களுடன் கலந்து கொண்டு அரசியல் பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 வடமாகாண ஆளுநர் எந்தவொரு பாடசாலை நிகழ்விலும் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பிய போதிலும் அரச தரப்பினர் இதனைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை என இங்குள்ள மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.





0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com