Home » , , » வடக்கு,கிழக்கு பிரதேச தமிழ் பேசும் மக்களுக்கு மாகாண சபைகளின் அதிகாரங்கள் அவர்களிடம் போய் சேராதவாறு அடக்கி முடக்கப்பட்டுள்ளது.-வைத்திய கலாநிதி ஜீ. குனசீலன்

வடக்கு,கிழக்கு பிரதேச தமிழ் பேசும் மக்களுக்கு மாகாண சபைகளின் அதிகாரங்கள் அவர்களிடம் போய் சேராதவாறு அடக்கி முடக்கப்பட்டுள்ளது.-வைத்திய கலாநிதி ஜீ. குனசீலன்

வடமாகாண சபை தேர்தலானது கடந்த 40 வருட போராட்ட வரலாற்றில் தமிழர்கள் அனுபவித்த துன்ப துயரங்களை ஈடு செய்வதற்கான ஒரு ஆரம்ப பாதையாக அமைந்துள்ளதாக வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர்  வைத்திய கலாநிதி ஞானசீலன் குனசீலன் தெரிவித்தார்.
 

-இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
 

-தமிழர் போராட்ட வரலாற்றில் அனுபவித்த தியாக மரணங்கள், அங்கவீனங்கள்,இழப்புக்கள்,பொருளாதார இழப்புக்கள்,கலை,கலாச்சார,கல்வி சீரழிவுகள், வரலாற்று தோல்விகள், போன்றவற்றிற்கு பின் வரவேண்டிய  அரசியல்,சமூக,பொருளாதார ,விழுமிய, வரலாற்று  முழுவெற்றியாக  இத்தேர்தலை கருத முடியாயினும்  அந்த நீண்டதொரு வரலாற்றுக்கு பின் நாம் விடப்போகும் ஒரு ஆறுதல் பெருமூச்சாகவும்,எம் விடுதலை பாதையில் ஒரு நம்பிக்கை ஒளியாகவும்  இந்த தேர்தலை பார்க்கலாம்.
 

-இலங்கை அரசியல் வரலாறு என்பது எப்போதும் ஓர் அழுக்கு படிந்த ஒன்றாகவே காணப்பட்டு வந்தது.
 

இனவாதமும்,மதவாதமும்,சாதிபேதமும்,ஆழப்பதிந்த பிரதேச வாதமும் எமது தேசிய ஒருமைப்பாட்டை சிதைத்தொழிக்கும் நச்சுக்கிரிமிகளாக இருந்து கொண்டே இருக்கின்றது.
 

-போரினால் மூவின மக்களும் இழந்தவை தான் அதிகம்.அதனை ஈடு செய்ய இந்த அரசு இதயச்சுத்தியுடன் முயற்சிகிளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.
 

இலங்கையில் இது வரை நடக்காத ஒன்று நடந்தாக வேண்டும்.அது சிறுபான்மை இனத்தவருடைய அரசியல் பொருளாதார உரிமைகளை மதித்து நடப்பதேயாகும்.
 

இது உண்மையாக அமுலுக்கு வரும்  வரைக்கும் தமிழ் பேசும் மக்கள் தவித்துக்கொண்டே இருப்பார்கள். 
 

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கினங்க மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட நிகழ்வானது அரசியல் அதிகார பரவலாக்கத்திற்காண அத்திவாரமாக காணப்படுகின்றது.
 

-தமிழ் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அதிகார பரவலாக்கும் முறை இது வரைக்கும் சிங்கள மக்களாலேயே அனுபவிக்கப்பட்டு வந்தது.ஆனால் வடக்கு,கிழக்கு பிரதேச தமிழ் பேசும் மக்களுக்கோ மாகாண சபைகளின் அதிகாரங்கள் அவர்களிடம் போய் சேராதவாறு அடக்கி முடக்கப்பட்டன.
 

-எனவே இந்த வடமாகாண சபை தேர்தலானது  தமிழ் பேசும் மக்களை ஒன்றினைக்க வழிவகுத்துக்கொடுத்துள்ளது.
 

எமது மக்கள் அடிமைகள் இல்லலை.நாங்கள் சுய நிர்ணய உரிமைக்காக அன்றும்,இன்றும்,என்றும் போராடுபவர்கள் என்பதனை இந்த அரசிற்கு எடுத்துரைக்க வேண்டும்.
 

தமிழர்களை தமிழனே ஆழ வேண்டும்.இதற்காண ஒரு ஆரம்ப வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  சந்தர்ப்பமே இந்த வடமாகாண சபை தேர்தல் ஆகும்.
 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
 

-இந்த தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிகளவிலான ஆசனங்களை கைப்பற்றி வடமாகாண சபையினை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சி செய்கின்ற போது தான் தமிழரின் ஒற்றுமையினையும்,தேசிய உணர்வினையும் இந்த அரசிற்கும்,தேர்தலை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்ட முடியும்.
 

எனவே இந்த தேர்தலை சாட்டாக வைத்துக்கொண்டு சர்வதேசத்திணுடைய பார்வையில் இருந்து  தப்புவதற்காகவும், தமிழ் பேசும் மக்களினுடைய உரிமைகளை தொடர்ந்தும் மறுப்பதற்காகவும்,பல்வேறு சலுகைகள்,அபிவிருத்தித்திட்டங்கள் என்ற பொய்யான போர்வையில் தமிழ் தேசியத்தின் வெற்றியை முறியடிக்க பல்வேறு சக்திகள் களமிறங்கியுள்ளன.
 

எனவே தமிழ் மக்கள் இவ்வாறான சக்திகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
 

-இந்த பாரிய கடமையில் முஸ்ஸிம் சகோதரர்களும் தற்போதைய நாட்டின் நிலைமைகளை உணர்ந்தவர்களாக தங்களின் உரிமைகளை வென்றிட தமிழ் மக்களுடன் கைகோர்க்க வேண்டும்.
 

இந்த தேர்தலில் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் கைகோர்த்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
 

இது தன்மானமுள்ள ஒவ்வெரு தமிழனின் தார்மீக பெறுப்பாகும்.என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-

(8-07-2013)

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com