Home » » தேர்தல் விதிமுறை மீறல் குறித்து முறையிட்டால் தான் நடவடிக்கை; யாழ். தெரிவத்தாட்சி அலுவலர்

தேர்தல் விதிமுறை மீறல் குறித்து முறையிட்டால் தான் நடவடிக்கை; யாழ். தெரிவத்தாட்சி அலுவலர்

தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டால் மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தேர்தல் விதிமுறைகள் மீறிய செயலா என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குப் பதிலளிக்காமல் மழுப்பினார்

அவர். வடமாகாண சபைக்கான தேர்தலுக்காக யாழ்.மாவட்டத்தில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்; யாழ்.மாவட்டத்தில் இது வரை எந்தவொரு தேர்தல் விதிமுறை மீறல் குறித்தோ அல்லது தேர்தல் வன்முறை தொடர்பிலோ முறைப்பாடு எமக்குக் கிடைக்கப் பெறவில்லை என்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக இடம்பெற்ற போராட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற வேட்பு மனுத்தாக்கலின் போதான ஆரவாரம் என்பன தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டனர்.

 அதற்குப் பதிலளித்த தெரிவத்தாட்சி அலுவலர், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கட்சிகளால் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்றார். முறைப்பாடு செய்யப்பட்டால் மாத்திரமா நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகவியலாளர்கள் பதில் கேள்வி எழுப்பினர். கட்சிகளால் முறைப்பாடு செய்யப்பட்டால் மாத்திரமல்ல தேர்தல் சட்டவிதிகளை யாராவது மீறுவது அவதானிக்கப்பட்டால் நிச்சயம் தேர்தல்கள் ஆணையாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவத்தாட்சி அலுவலர் பதிலளித்தார்

 கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக இடம்பெற்ற சம்பவம் தேர்தல் விதிமுறையை மீறிய செயல் இல்லையா எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, இதற்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை. இது கட்சி சம்பந்தப்பட்டது என்றார் தெரிவத்தாட்சி அலுவலர். முதல்முறையாக யாழ். மாவட்ட வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு வெளியே இடம்பெறவுள்ளன. யாழ். மத்திய கல்லூரியிலேயே வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நடவடிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுத்தாக்கலின் போதான ஆரவாரம் என்பன தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்குப் பதிலளித்த தெரிவத்தாட்சி அலுவலர், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கட்சிகளால் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்றார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com