யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (30) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னர் நடக்கும் தேர்தல் என்பதால் வடமாகாண சபை தேர்தல் பல எதிர்பார்ப்பு மற்றும் சவால்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
இத் தேர்தலை ஒழுங்கான நீதியான தேர்தலாக நாம் நடாத்த முயற்சிக்கின்றோம். வாக்களிக்க தகுதியானவர்கள் அனைவரும் அவரரவர் விருப்பபடி வாக்களிக்க வேண்டும் அது அவர்களின் உரிமை.
மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் தென் மாகாணங்களுக்கு கிடைக்கும் அனைத்து பலாபலன்களும் வடக்கு மாகாணத்திற்கும் கிடைக்கும்.
ஜனநாயகம் என்பது மக்களால் தெரிவு செய்யப்படுவதே அது தற்போது வடக்கு மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை வடக்கு மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
தேர்தல் வன்முறைகள் மத்திய மாகாணத்தில் 120 வன்முறைகளும், வடமத்திய மாகாணத்தில் 88 வன்முறைகளும், வடமாகாணத்தில் 43 முறைப்பாடுகளும் என மூன்று மாகாணகளிலும் பதிவாகியுள்ளன.
இதில் வடக்கை பொறுத்த வரை ஏனைய இரண்டு மாகாணங்கள் போல பாரிய வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை. இரண்டு ஆயுதம் தொடர்பான முறைப்பாடும் ஏனைய பெரும்பாலான முறைப்பாடுகள் சட்ட விரோத தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாகவே கிடைக்க பெற்றுள்ளன.
வன்முறைகள் அற்ற தேர்தல் வடக்கில் நடைபெற வேண்டுமாயின் தனி நபர்களிடம் உள்ள வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமாயின் அவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் ஊடக பாதுகாப்பினை பெற்று கொள்ளலாம்.
வடக்கில் நீதியான நேர்மையான தேர்தலை சகலரினதும் ஒத்துழைப்புடன் நடத்தும் சக்தி எமக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment