Home » , » என்னைப்போல இனி எந்த ஒரு தாயும் கண்ணீர் சிந்த கூடாது (படங்கள் இணைப்பு)

என்னைப்போல இனி எந்த ஒரு தாயும் கண்ணீர் சிந்த கூடாது (படங்கள் இணைப்பு)

என்னைப்போல இனி எந்த ஒரு தாயும் இந்த உலகத்தில் கண்ணீர் சிந்த கூடாது என ஜனநாயக கட்சியின் வடமாகாண வேட்பாளர் சிவசுந்தரி தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த 2006ம் ஆண்டு நான் எனது இரண்டு ஆண் பிள்ளைகளையும் இழந்தனான். இளைய மகன் சஜிந்தன் 2006 ம் ஆண்டு கடைக்கு போனவன் இன்று வரை வீடு திரும்பவில்லை.

இளையமகன் காணமால் போய் 4 மாதத்தில் எனது மூத்த மகன் பரந்தாமன் வீட்டில படித்து கொண்டிருந்த வேளை வீட்டுக்கு வந்த இருவர் அவனை சரத்தில பிடிச்சு இழுத்து கொண்டு போய் வீட்டு வாசலுக்கு முன்பாக வீதியில் வைத்து என் கண் முன்னாலையே தலையிலே சுட்டு கொன்றார்கள்.

அவன் தலையில் இருந்து இரண்டு ரவுன்சையும் நான் தான் எடுத்தேன். அன்றில் இருந்து நான் செத்த வீடுகளுக்கோ வைத்தியசாலைக்கோ போவதில்லை.

இன்று சொல்கின்றனர் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் தரப்போவதாக, எந்த தாயின் மனது இதை ஏற்று கொள்ளும் இனிமேலும் என்னை போல எந்த தாயும் இந்த உலகத்தில கண்ணீர் சிந்த கூடாது என தெரிவித்தார்.

அவர் இவ்வாறு தெரிவித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் உங்கள் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த போதே வன்னியில் இறுதி யுத்தத்தில் பலர் காணாமல் போயுள்ளார்கள் அப்படி இருக்கையில் நீங்க காணாமல் போன ஒருவரின் தாய் என்ற ரீதியில் எதற்காக நீங்கள் அவர் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர்,

வன்னியில் நடைபெற்றது ஆணவ யுத்தம் அதில் எம்மை அழிக்க பல தரப்புக்களும் முனைந்திருந்தன. அதில் தனியே சரத் பென்சேகாவை மட்டும் குற்றம்சாட்ட முடியாது.

அங்கு நடைபெற்றது தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்பெறவில்லை எனவே அவரை குற்றவாளி என கூற முடியாது என தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com