Home » , » சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகத்தான் போட்டியிடுகிறேன்; வேட்பாளர் ஞானசக்தி ஸ்ரீதரன் கூறுகிறார்

சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகத்தான் போட்டியிடுகிறேன்; வேட்பாளர் ஞானசக்தி ஸ்ரீதரன் கூறுகிறார்

சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களைப் பேணுவதற்காகவே தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் ஞானசக்தி ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது: வீடு இல்லாமல், தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல், பிள்ளைகளுக்கு சரியான கல்வியில்லாமல், அடிப்படையான மருத்துவ வசதியில்லாமல், மின்சாரம் இல்லாமல், பாதை இல்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், குடிதண்ணீர் இல்லாமல் வாழ்பவர்களுக்காகவே நான் செயற்பட விரும்புகிறேன்.

 சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வாழ்வு கந்தலாய்ப்போன மக்களின் நலன்களுக்காகவே வாழ விரும்புகிறேன். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் வாழும் அநீதியான சமூக அமைப்புமுறை பற்றி அரங்கத்தில் கேள்வி எழுப்பவே இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றேன்.

 இங்குள்ள சாதாரண மக்களில் அக்கறையுள்ள தமிழர்கள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறார்கள். இவர்களின் பலருடனும் இணைந்து எனது பணிகளை முன்னெடுப்பேன் - என்றார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com