Home » , , , » யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களையும் செல்வங் கொழிக்கின்ற வளமிக்க பகுதியாக மாற்றியமைப்போம்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களையும் செல்வங் கொழிக்கின்ற வளமிக்க பகுதியாக மாற்றியமைப்போம்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுப்பதன் ஊடாகவும், இதயசுத்தியுடன் அரசுடன் பேசுவதன் மூலமுமே அரசியல் தீர்வை
உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் பிரசார அங்கு ரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. வில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கி யஸ்தர்கள் கலந்துகொண்டி ருந்தனர்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி நிலைப் பாட்டிற்கு அமை வாகவே இணக்க அரசியலில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். மக்கள் எமக்கு பலம் சேர்க்கும் பட்சத்தில் மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வட மாகாணத்தை செல்வங் கொழிக்கின்ற வளமிக்க பகுதியாக மாற்றியமைப்போம்.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது ஆசியுடன் பலாலியிலும் மக்களை மீளக்குடி யேற்றவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் காணிப் பிரச்சினை தொடர்பில் அரசுடன் பேசத்தயார் என அறிவித்துள்ளார்.

அவரது கூற்று உண்மையாகயிருக்குமானால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிப்பதன் ஊடாகவும் இதயசுத்தியுடன் அரசுடன் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுப்பதன் மூலமுமே தமிழர் அரசியல் பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com