பணிப்பாளர் அவர்கட்கு,
VSA/MP/VA/CaFFE/35
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான
மக்கள் இயக்கம் ( CaFFE)
இராஜகிரிய
21..08.2013
அன்புடையீர்!
வடமாகாண சபைத் தேர்தல் - 2013
தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடு
வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கள்
வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினது (TNA) சார்பாகத் தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினராகிய நான் இங்கு, அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக இடம் பெறும் தேர்தல்கால முறைகேடுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இவற்றைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவைபற்றி எனக்கும் அறியத்தருமாறும் அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.
1.முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அலுவலக வாகனங்கள், ஆளும் கட்சி சார்பாகப் போட்டியிடுவோரின் பிரசார நடவடிக்கைக்கு ஈடுபடுத்துவதுடன், அமைச்சின் உத்தியோகத்தர்களும் அவ்வாறே செயற்பட பணிக்கப்பட்டுள்ளனர்.
2.; வவுனியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 21.08.2013 (புதன்கிழமை) ஆம் திகதி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களால் கச்சேரியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, அவர்களை ஐந்து ஐந்துபேர் கொண்ட குழுக்கலாகப் பிரித்து ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு தலைவரைத் தெரிந்து அத்தலைவர் ஒவ்வொருவரிடமும் ஒரு படிவத்தைக்கொடுத்து அவர்கள் சேவையாற்றும் பகுதிகளில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இயங்கும் குடும்பங்களின் குடும்ப அட்டைகள் இலக்கம்,அவர்களுக்கரிய வாக்காளர் இடாப்பு இலக்கங்கள் என்பனவற்றை பதிவு செய்து தருமாறும், அவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவான குடும்பங்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும் என்று கூறியதுடன், சமுத்தி உத்தியோகத்தர்களுக்கு தற்போது உள்ள அரசாங்கமே உத்தியோகம் தந்ததால் அவர்கள் எல்லோரும் கட்டாயமாக அரசாங்கத்திற்கு மாகாண சபைத்தேர்தலில் ஆதரவு தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்துள்ளார்.
3. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மரக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவு கிராம அலுவலர் திரு. அரியரடணம் அவர்களால் தனது அலுவலகத்திற்கு சேவை பெற வரும் பொது மக்களை ஆளும் கட்சி வேட்பாளர் திரு. ப. உதயராசாவிற்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தப்படுகின்றனர்.
4. முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளரான திரு. ஜெயராஜ்( கிருபன்) என்பவர், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 'வீடு' சின்னத்தில் போட்டியிடும் திருவாளர்கள் து. ரவிகரன், சி.சிவமோகன், கனகசுந்தரசுவாமி, புவனேஸ்வரன் ஆகிய நான்கு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என வாக்காளர்களை நேரடியாகக் கோரும் பிரசுரங்களை விநியோகித்து வருவதால், சம்பந்தப்பட்டோர் தமது தேர்தல் ஜனநாயகக் கடமைகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு பெரும் இடையூறாகவுள்ளது.
நன்றி.
ந. சிவசக்தி ஆனந்தன், பா.உ,
வன்னி மாவட்டம்






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment