Home » » மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் 149 முறைப்பாடுகள்

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் 149 முறைப்பாடுகள்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் 149 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் தேர்தல் வன்முறைகள் குறித்து 10 முறைப்பாடுகளும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.

குருநாகல் மாவட்டத்திலேயே கூடுதலான வன்முறைகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த மாவட்டத்தில் 7 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன.

நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தேர்தல் வன்முறை தொடர்பில் தலா ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

அரசாங்க வாகனங்களின் பயன்பாடு குறித்து 29 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com