Home » , » வடக்கில் இராணுவம் நடமாடக் கூடாது - சுரேஷ் பிரேமசந்திரன்

வடக்கில் இராணுவம் நடமாடக் கூடாது - சுரேஷ் பிரேமசந்திரன்

வடக்கில் தேர்தல் ஜனநாயகமாக நடைபெற விரும்பினால் இராணுவத்தினர் சிவில் உடையிலையோ, சீருடையிலையோ நடமாட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியிறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (03) காலை 11 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழில் 13 ஆயிரம் இராணுவத்தினரே இருப்பதாக கூறப்படுகின்றது, யாழ்ப்பாணம் மட்டும் வடக்கல்ல, 10 லட்சம் பேர் வாழ்கின்ற வடக்கு மாகாணத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு யாழ் வந்திருந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தான் இராணுவத்தினைரை யாழ்பாணத்தில் காணவில்லை என கூறியிருந்தார். அவருக்கு எவ்வாறு தெரியும் இங்குள்ள இராணுவத்தினர் சிவில் உடையில் இருக்கின்றனர் என்று.

நேற்றைய தினம் (02) வல்வெட்டி துறை. தீருவிலில் வல்வெட்டி துறை நகர சபையினரால் அமைக்கப்பட்டிருந்த பொது பூங்கா வொன்றின் பெயர் பலகை இனம் தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

அந்த இனம் தெரியாதவர்கள் இராணுவத்தினரே என நாம் சந்தேகப்படுகின்றோம். ஏனெனில் அந்த பூங்கா முன்னர் விடுதலைப் புலிகளின் நினைவிடமாக அமைந்திருந்து. பின்னர் கடந்த காலங்களில் அது அழிக்கப்பட்டு அது மீண்டும் வல்வெட்டி துறை நகர சபையினால் புனரமைக்கப்படிருந்தது அதனையே நேற்றைய தினம் சேதமாக்கியுள்ளனர்.

அதேவேளை கடந்த வாரம் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு அக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்களால் யாழ். மாவட்ட செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருந்தது.

தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணாக நாடாத்தப்பெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்காது பொலிசார் வேடிக்கை பார்த்திருந்தனர். நாம் ஜனநாயக ரீதியாக மக்களுக்காக போராட்டம் நடாத்தினால் எம் மீது தாக்குதல் நடாத்தப்படுகின்றது.

நாட்டின் ஜனநாயகம் எந்தளவு இருக்கின்றது என இதில் இருந்து விளங்குவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com