Home » » குடாநாட்டில் ஜனநாயகச் சூழல்; முகாமுக்குள்ளேயே படையினர்; கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தது அரசு

குடாநாட்டில் ஜனநாயகச் சூழல்; முகாமுக்குள்ளேயே படையினர்; கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தது அரசு

வடக்குத் தேர்தலில் இராணுவ அச்சுறுத்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நேற்று நிராகரித்துள்ள அரசு, இராணுவத்தினர் முகாம்களில்தான் உள்ளனர். 

பொலிஸார்தான் வீதியிலுள்ளனர். குடாநாட்டில் ஜனநாயக அமைதிச் சூழல் நிலவுகிறது. அங்கு ஒரு பதுங்குகுழி இருந்தால் காட்டுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளது.

"வடக்குத் தேர்தல் முடிவால் என்ன நடக்கும் என்று அறிந்தே நாம் தேர்தலுக்குத் தயாராகியுள்ளோம். வடக்குத் தேர்தலோ தமிழ்க் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரோ எமக்குச் சவால் அல்ல'' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அரசின் வடக்குத் தேர்தல் குழுத் தலைவருமான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வடக்குத் தேர்தலில் 30 அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. இதுதான் ஜனநாயகத்தின் முதல் சாட்சி. அங்கு ஜனநாயக சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில், பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு செப்டெம் பர் 21ஆம் திகதி வடக்கு மக்கள் தக்க பதிலளிப்பர் என்றும் சுசில் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

1988ஆம் ஆண்டின் பின்னர் 25 வருடங்களையடுத்து இப்போதுதான் வடமாகாணத்தில் தேர்தல் நடத் தப்படுகிறது. இந்த விவகாரத்தில் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகள் அனைத் தும் முறியடிக்கப்பட்டுள்ளன. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியை நிலைநிறுத்தவே வடக்கில் நாம் போட்டியிடுகிறோம். வடக்குத் தேர்தல் 30 அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இதுதான் அங்கு நிலவும் ஜனநாயக ஆட்சிக்கு முதல் சாட்சி.

தமது வேட்பாளர்களுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது எனத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை. சேனாதிராசா குற்றஞ்சாட்டியிருந்தார்.

வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்குள்ளேதான் இருக்கின்றனர். பொலிஸார்தான் வீதியில் உள்ளனர். இவ்வாறான நிலையில் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களுக்கு செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் தக்க பதிலளிப்பர் என்றார் சுசில்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com