வட மாகாண தமிழ் மக்கள் உயிர்,சொத்திழப்புகளை சந்தித்தவர்கள். அவர்கள் அரசின் அபிவிருத்தி என்ற மாயைக்குள் சிக்குண்டு உணர்வுகளை இழக்கமாட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து இலங்கை தேசத்தையும், சர்வதேசத்தையும் வியக்க வைக்கவுள்ளனர்.
இதனை நாம் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி உணர்ந்து கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
திருக்கோவில், கோரைக்களப்பு, சமாதிப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது வெறுமனே தேர்தல் வெற்றி அல்ல. சிறுபான்மை இனங்களுக்கெதிராக பெரும் பூதமாக வெளிக்கிளம்பியுள்ள சிங்கள பெளத்த தீவிரவாதத்திற்கு அதிர்ச்சியை கொடுக்கும் வரலாற்றில் எழுதப்படவுள்ள ஒரு பெறுபேறாக தேர்தல் முடிவு அமையும்.
வடபுலத்தில் வாழும் எமது சகோதர, சகோதரிகள், சிறுபான்மை இனங்கள் சுதந்திரமானவர்கள். அடிமைகள் அல்ல என்பதை உலகறிய வைக்கவுள்ளனர். இத்தேர்தல் மூலம் தமது உள்ளக் கிடக்கைகளை மஹிந்த ராஜபக் ஷ அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தவுள்ளனர்.
தமிழ் மக்களின் பேரபிமானம் பெற்ற அரசியல் இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனை வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்துள்ளமையால் மஹிந்த ராஜபக் ஷ அரசு கலக்கத்திற்கு உள்ளாகியுள்ளதை நாம் கண்கூடாக காண முடியும்.முதலமைச்சராகி அவர் நடத்தப் போகும் சட்ட ரீதியான, ஜனநாயக ரீதியான போராட்டங்கள் கலங்கி நிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கு காவலரணாக நம்பிக்கை ஒளியாக நிச்சயம் திகழும்.
எமது தமிழ்த் தேசியத்தின் பெருந்தலைவரான இரா. சம்பந்தன் எடுத்த வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்யும் இந்த தீர்க்கதரிசனமான தீர்மானமும் சி.வி. விக்கினேஸ்வரனா? மாவை சேனாதிராசாவா? வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் என்ற வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற அதி முக்கியமான தருணத்தில் தமிழினத் தொண்டனான தியாகி – மாவை சேனாதிராசா தனது இனத்தின் நலனை மேல் என்று விட்டுக் கொடுப்பும் தியாகமும் செய்துள்ளமை தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிணாமத்தை நிதர்சனமாக படைக்கப் போகின்றது. இந்த தேர்தலில் நாம் காணும் மற்றுமொரு வரலாறாக பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் அமோக ஆதரவை பெறவுள்ளமை புலனாகின்றது.
தமிழினம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பொது நோக்கின் அடிப்படையில் ஒன்றுபட்ட சக்தியாக களத்தில் குதித்துள்ளமை மாபெரும் வெற்றிக்கான படிக்கல் அல்லது அடிக்கல் எனலாம். வாழ்வதா? சாவதா? என்று மனக்காயங்களுடன் நடை ப்பிணங்களாக உலா வரும் எமது தமிழினம் தனது சிந்தனைக்கு வேலை கொடுத்து சிந்திய குருதியும் கண்ணீரும் இனியும் வேண்டாம். நாம் ஒன்று படுவோம்,ஒற்றுமையாக எமது தேசியத்தின் மீட்புக்காக வாளை விடவும் கூரிய வாக்குரிமையை தமிழின விடிவுக்காக அளிப்போம் என்றார்
இதனை நாம் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி உணர்ந்து கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
திருக்கோவில், கோரைக்களப்பு, சமாதிப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது வெறுமனே தேர்தல் வெற்றி அல்ல. சிறுபான்மை இனங்களுக்கெதிராக பெரும் பூதமாக வெளிக்கிளம்பியுள்ள சிங்கள பெளத்த தீவிரவாதத்திற்கு அதிர்ச்சியை கொடுக்கும் வரலாற்றில் எழுதப்படவுள்ள ஒரு பெறுபேறாக தேர்தல் முடிவு அமையும்.
தமிழ் மக்களின் பேரபிமானம் பெற்ற அரசியல் இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனை வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்துள்ளமையால் மஹிந்த ராஜபக் ஷ அரசு கலக்கத்திற்கு உள்ளாகியுள்ளதை நாம் கண்கூடாக காண முடியும்.முதலமைச்சராகி அவர் நடத்தப் போகும் சட்ட ரீதியான, ஜனநாயக ரீதியான போராட்டங்கள் கலங்கி நிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கு காவலரணாக நம்பிக்கை ஒளியாக நிச்சயம் திகழும்.
எமது தமிழ்த் தேசியத்தின் பெருந்தலைவரான இரா. சம்பந்தன் எடுத்த வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்யும் இந்த தீர்க்கதரிசனமான தீர்மானமும் சி.வி. விக்கினேஸ்வரனா? மாவை சேனாதிராசாவா? வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் என்ற வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற அதி முக்கியமான தருணத்தில் தமிழினத் தொண்டனான தியாகி – மாவை சேனாதிராசா தனது இனத்தின் நலனை மேல் என்று விட்டுக் கொடுப்பும் தியாகமும் செய்துள்ளமை தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிணாமத்தை நிதர்சனமாக படைக்கப் போகின்றது. இந்த தேர்தலில் நாம் காணும் மற்றுமொரு வரலாறாக பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் அமோக ஆதரவை பெறவுள்ளமை புலனாகின்றது.
தமிழினம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பொது நோக்கின் அடிப்படையில் ஒன்றுபட்ட சக்தியாக களத்தில் குதித்துள்ளமை மாபெரும் வெற்றிக்கான படிக்கல் அல்லது அடிக்கல் எனலாம். வாழ்வதா? சாவதா? என்று மனக்காயங்களுடன் நடை ப்பிணங்களாக உலா வரும் எமது தமிழினம் தனது சிந்தனைக்கு வேலை கொடுத்து சிந்திய குருதியும் கண்ணீரும் இனியும் வேண்டாம். நாம் ஒன்று படுவோம்,ஒற்றுமையாக எமது தேசியத்தின் மீட்புக்காக வாளை விடவும் கூரிய வாக்குரிமையை தமிழின விடிவுக்காக அளிப்போம் என்றார்

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment