Home » , » வடக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தால் வெளிநாட்டு உதவியுடன் பிரதேசத்தை கட்டியெழுப்பலாம்-மாவை சேனா­தி­ராஜா

வடக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தால் வெளிநாட்டு உதவியுடன் பிரதேசத்தை கட்டியெழுப்பலாம்-மாவை சேனா­தி­ராஜா

வட­மா­காண சபையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­று­வதன் மூலம் வெளிநாடு­க­ளி­லி­ருந்து கிடைக்கும் நிதி உத­வியைப் பயன்­ப­டுத்தி போரினால் அழிந்து சிதை­வ­டைந்த நிலை­யி­லுள்ள எமது பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்ய முடியும். எனவே கூட்­ட­மைப்பின் அமோக வெற்­றிக்­காக அனை­வரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்­டு­மென யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா வலி.தென்­மேற்குப் பிர­தேச சபையின் ஆளும் கட்சி உறுப்­பி­னர்­களுக்கிடை­யி­லான கலந்­து­ரை­யா­டலில் தெரி­வித்தார்.

வலி.தென்­மேற்குப் பிர­தேசசபை மண்­ட­பத்தில் நடை­பெற்ற இக் கலந்­து­ரை­யா­டலில் மாவை சேனா­தி­ராஜா மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த காலங்­களில் நடை­பெற்ற தேர்­த­லிலும் பார்க்க இம்முறை நடை­பெ­ற­வுள்ள மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை மிக முக்­கி­ய­மான தேர்­த­லாகும். இத் தேர்தல் தமிழ் மக்­களின் உரி­மையை நிலை நாட்டும் தேர்­த­லாகும். மக்­களின் வாக்­க­ளிக்கும் வீதத்தை அதி­க­ரிக்க வேண்டும். கடந்த காலங்­களைப் போல் ஏனோ­தானோ என்­றி­ருக்­காமல் அனை­வ­ரையும் வாக்­க­ளிக்கச் செய்ய  வேண்டும். மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த எவ­ருக்கும் வாக்­க­ளிக்­கலாம் அது மக்­களின் உரி­மை­யாகும்.

பிர­தேச சபையில் இடம்­பெற்று வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்வு காணப்­படும். அது பற்றி எவரும் குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை. மாகாண சபைத் தேர்­த­லுக்கு அனை­வரும் ஒன்றுபட்டு வெற்­றிக்­காக உழைக்க வேண்டும்.

மாகாண சபை என்பது அபிவிருத்திக்கான முக்கிய படிக்கல்லாகும். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதன் ஊடாக தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வினையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதன் ஊடாக வடக்கினை வெளிநாட்டவர்களிடமிருந்து கிடைக்கும் நிதியுதவிகளின் ஊடாக மீளக் கட்டியெழுப்ப முடியும். மாகாண சபையின் ஊடாக வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி இப்பிரதேசத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்யமுடியும்.

எனவே சகல தமிழ் மக்களும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை உணர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யவேண்டும்.
இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியே தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டும் என்றார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com