தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பத்தொன்பது வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசா, முதன் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சுமந்திரன், சி.சிறிதரன், அப்பாத்துறை விநாயகமூர்த்தி, சிவாஜிலிங்கம் ,தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளோட் அமைப்பின் சித்தார்த்தன், வடமாகாண சபை வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்களும் மண்டபத்திற்கு வெளியே பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையினைக் கேட்டுக்கொண்டிருநதார்கள்.
![]() |
| Add caption |


.jpg)
.jpg)





















.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment