Home » , » வடக்குத் தேர்தலை சரியான முறையில் பயன்படுத்தி உரிமையைப் பெற முன்வரவேண்டும் : சுரேஷ் எம்.பி.

வடக்குத் தேர்தலை சரியான முறையில் பயன்படுத்தி உரிமையைப் பெற முன்வரவேண்டும் : சுரேஷ் எம்.பி.

வட, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசத்தில் சமஷ்டி முறையில் அமைந்த அரசமைப்பு முறையூடாகவே தமிழ் மக்களுடைய தனித்துவம் பேணிப்பாதுகாக்கப்படும். இவ் இலக்கினை நோக்கிச்செல்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையதும் தமிழ் மக்களுடையதுமான இலக்காக காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் தனித்துவமாக தமது பூர்வீக மண்ணில் வாழ்வதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். யுத்தத்திற்கு பின்னர் திறக்கப்பட்ட வழியாக சர்வதேசத்தின் உதவியுடன் வடமாகாணசபைத் தேர்தலினை சரியாகப் பயன்படுத்தி எமது உரிமையை பெறுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் வலிதெற்கு பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் சுன்னாகம் பஸ்நிலைய முன்றலில் நடைபெற்றபோது அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com