Home » » தேர்தல் தொடர்பில் இதுவரை 309 முறைப்பாடுகள் - தேர்தல்கள் செயலகம்

தேர்தல் தொடர்பில் இதுவரை 309 முறைப்பாடுகள் - தேர்தல்கள் செயலகம்

வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 309 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

அதிகளவிலான 78 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்தது.

கண்டி மாவட்டத்தில் 46 முறைப்பாடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 29 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளது.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியது.

அரச வாகனங்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தல் தொடர்பில் 47 முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டு பிரிவு குறிப்பிட்டது

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com