செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தலானது இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும் என்பதுடன் அது இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து பான் கீ மூன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
´வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குறிப்பாக வட மாகாணத்தில் 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலானது அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கையர்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் மிக முக்கிய வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment