வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாக பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பில் வேட்பாளர்ளை அறிவுறுத்தும் கூட்டம் உடுத்துறை, தாழையடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பரப்புரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிpன் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் ஜனா,
இன்று வடக்கில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர். இதனைக் கண்டு இன்று சிங்கள தேசம் கதிகலங்கி நிற்கின்றது.
எமது வெற்றி எமது ஒற்றுமையிலேயே உள்ளது. நாங்கள் ஒன்றுபட்ட சக்தியை காட்டும் போதே அது எமக்கு பலம் மிக்கதாக அமைகின்றது.
இன்று எமது ஒற்றுமையை சீர்குலைத்து எமது பலத்தினை குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
எதனை செய்தாலும் அத்தனை நடவடிக்கைகளையும் முறியடிக்கும் சிறந்த மனநிலையிலும் உறுதியான மனநிலையிலும் எமது மக்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை அரசாங்கத்துக்கு புகட்டுவார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்கள் செறிவாக உள்ள போதிலும் கடந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்துள்ளனர்.
நாங்கள் வடக்கு கிழக்னை இணைத்துஒன்றாக வாழவேண்டுமாகவிருந்தால் இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி உறுதிப்படுத்த வேண்டும். அதுவும் பெரும்பான்மை பலத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி உறுதிப்படுத்த வேண்டும்.
எங்களை நாங்கள் காலம் வெகு தொலைவில் இல்லை. நாங்கள் ஒன்றுபட்டு செயற்படும் போது எமது சக்தி பலப்படும். நாங்கள் அனைத்தையும் இழந்த சமூகம் எங்களை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
எங்களிடம் முழு அதிகாரங்கள் உள்ள போதே எமது பகுதியை நாங்கள் கட்டியெழுப்ப முடியும். இதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment