ஆனையிறவு கிராம அலுவலர் பிரிவில் தட்டுவன்கொட்டி, உமையாள்புரம் கிராமங்களில் மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர். ஆனால் ஆனையிறவு, உப்பளம், சின்ன உப்பளம், நாவற்கொட்டியான் கிராமங்களில் இன்னமும் மக்கள் மீளக்குடியமரவில்லை.
இடம்பெயர்ந்து தங்கியுள்ள இடங்களின் முகவரிகளை உப அஞ்சலதிபருக்கு மக்கள் அறிவிக்காமையினாலும் 226 குடும்பங்களைச் சேர்ந்த 477 வாக்காளர் அட்டைகள் அஞ்சற்காரர்களினால் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ள வாக்காளர்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகளை தட்டுவன்கொட்டி உப அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு உப அஞ்சல் அதிபர் அறிவித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment