Home » , , » மன்னாரில் இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

மன்னாரில் இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (18-09-2013) புதன் கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

 இதன் போது பல ஆயிரக்கணக்கான தமிழ்,முஸ்லிம் மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்ட பலர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை தேர்தலுக்கான முஸ்லிம் வேட்பாளரான ஜனாப் அயூப் அஸ்மிம் அவர்களை ஆதரித்து நேற்றைய இறுதித் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினர்.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களான சட்டத்தரணி  எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,முஸ்லிம் வேட்பாளர் ஜனாப் அயூப் அஸ்மிம்,இ.சாள்ஸ் நிர்மலநாதன்,ஒஸ்பிஸ் யூட் ஆனந்தம் குரூஸ்,கி.விமலசேகரம்,வைத்தியகலாநிதி என்.குனசீலன், சட்டத்தரணி  பாலசுப்பிரமணியம் டெனிஸ்,வி.எஸ்.சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.



















0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com