மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் எதிர்வரும் 18ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கும், அரசியல் விளம்பரங்கள் மற்றும் அறிக்கைளை வெளியிடுவதற்கும், ஒலிபரப்பவும் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் தொடர்பாக அரசியல்கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் அல்லது வேட்பாளர்களால் வெளியிடப்படும் எந்தவொரு பரப்புரைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18ம் திகதி நள்ளிவரு 12 மணியிலிருந்து தேர்தல் முடியும் வரை அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment