வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கான விஜயங்களை தவிர்க்குமாறு கோரியுள்ளார்.
அவுஸ்திரேலிய, பிரித்தானிய மற்றும் நோர்வே தூதுவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்ய அனுமதி கோரியுள்ளனர்.
வட மாகாண மாவட்டச் செயலாளர்களை சந்திக்க அனுமதியளிக்குமாறு குறித்த இராஜதந்திரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனினும், இந்த கோரிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
வட மாகாணத் தேர்தல்கள் குறித்து ஆராயும் நோக்கில் இவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக தேர்தல் திணைக்களத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான தேவை ஒன்றுக்காக சந்திப்பு நடத்தப்பட்டால் அது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையிலேயே நடைபெற வேண்டுமென மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment