இன்று நடைபெறவுளள் வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலை இராணுவம் குழப்பாவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டுவர்.
இத்தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவும் இடம்பெறும் இதனை நாம் மட்டும் சொல்லவில்லை தேர்தல் கடமையில் ஈடுபடுகின்ற அதிகாரிகளும் தேர்தல் ஆணையாளரும் கூடத் தெரிவிக்கின்றார். வடக்கில் 62 வீதம் தொடக்கம் 70 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெறும் என்பது தேர்தல் ஆணையாளரின் கணிப்பாகவுள்ளது.
இத்தேர்தலில் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றியீட்டும் என்பதை எமது கட்சியின் சார்பில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு உறுதியாகக் கூறக்கூடியதாகவுள்ளது என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment