Home » » த.தே.கூ.வினால் மாகாண சபை மட்டத்தில் எதனையும் சாதிக்க முடியாது : யாழில் பஷில்

த.தே.கூ.வினால் மாகாண சபை மட்டத்தில் எதனையும் சாதிக்க முடியாது : யாழில் பஷில்

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது அரசின் உதவி இன்றி வடக்கை அபிவிருத்தி செய்ய முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் பிரசாரம் செய்து அமோக வெற்றிபெற்றது.

ஆனால் அவர்களினால் அரசினால் வழங்கப்பட்ட பணத்தில் இருந்து செய்ய வேண்டிய வேலைகளைக் கூட செய்ய முடியாத நிலையிலேயே காணப்படுகின்றார்கள் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் ஊடகவிலாளர்கள் மாநாட்டை நடத்தினார்.
இதில்கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் 500 மில்லியன் ரூபா செலவில் சாவகச்சேரி நகர சபைக்கான கட்டிடத் தொகுதியை ஆரம்பித்து வைத்தேன்.

குறிப்பிட்ட கட்டிடப் பணிகள் முடிவடைந்துள்ள போதிலும் அதனை திறந்து வைக்கக் கூடிய நிலையில் சாவகச்சேரி பிரதேச சபை காணப்படவில்லை. இதே போன்று சாவகச்சேரியில் உள்ள மீன்சந்தையொன்று மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

நான் அதனைப் பார்வையிட்ட பினனர் அதனைத் திருத்தும் வகையில் நிதியை வழங்கினேன். அதுவும் கூட இன்று வரைக்கும் திருத்தப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.

இத்தகைய நிலையில் காணப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை மட்டத்தில் எதனையும் சாதிக்க முடியாது என்பதே உண்மையாகும்.

கடந்த பல வருடங்களாக யுத்;ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இந் நாட்டில் வாழும் ஏனைய மக்களைப் போன்று இன்று அனைத்து சுதந்திரத்தையும அனுபவித்து வருகின்றார்கள்.

கடந்த காலத்தை நினைவு படுத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகும். இவைகளை கருத்தில் கொண்டு நடக்கப் போகும் வட மாகாண சபைத் தேர்தலில் உரிய பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியது தமிழ் மக்களுடைய கடமையும் பொறுப்பும் ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com