Home » , » தேர்தல் பரப்புரையில் ஆளுநர்; உடன் தடுத்து நிறுத்துங்கள் சரவணபவன் எம்.பி. ஆணையாளருக்குக் கடிதம்

தேர்தல் பரப்புரையில் ஆளுநர்; உடன் தடுத்து நிறுத்துங்கள் சரவணபவன் எம்.பி. ஆணையாளருக்குக் கடிதம்

அரச தரப்பு தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து வடமாகாண ஆளுநரைத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 அக்கடிதத்தின் பிரதி வடமாகாண உதவி தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சரவணபவன் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம் வருமாறு: வடமாகாண சபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி செப்ரெம்பர் 8 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்

 இது மிக உயர் பதவியொன்றை வகிக்கும் அதிகாரிக்கு உகந்த செயற்பாடாக இல்லாதது மட்டுமல்ல தனது பதவியை தவறாகவும் பயன்படுத்தியுள்ளார். இது சட்டத்துக்கு மாறானது மட்டுமன்றி ஒழுக்கக் கேடானதும் கூட. ஆளுநரின் இவ்வாறான நடத்தைகளை நாம் மிகுந்த வேதனையுடன் கவனித்து வந்துள்ளோம். அதுமட்டுமல்ல மாகாணசபையில் பணிபுரியும் பொது சேவையாளர்களுக்கு இடர் கடன்களை வழங்கும் அளவுக்குச் சென்று அவர்களை சிறுமைப்படுத்தியுள்ளார்.

 இது அவர்களின் தனிப்பட்ட விடயம் மட்டுமின்றி அவர்களின் உரிமையும் கூட. ஒரு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது தேர்தலில் அரசு தரப்பு கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் படி கேட்டிருக்கிறார் இது பொது சேவைத்துறைக்கு ஓர் அப கீர்த்தியாகும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com