தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர உட்பட 06 தரப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்கள் குழு மனுக்கள் சம்பந்தமாக எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தவிட்டது.
இந்த வழக்கு முடியும் வரை வடக்கு மாகாண சபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
எனினும் தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment