Home » » வடக்கில் தேர்தல் சுதந்திரமானதாக இருக்கும்: வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நம்பிக்கை

வடக்கில் தேர்தல் சுதந்திரமானதாக இருக்கும்: வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நம்பிக்கை

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலாக இருக்கும் என நம்புவதாக பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர். பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளனர். அவர்கள் நாளைய தினம் வடக்கில் உள்ள சகல மாவட்டங்களும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

 கென்யாவின் முன்னாள் உப ஜனாதிபதி ஸடீபன் கலேன்ஸோ முஸ்யோகா தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த குழுவில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா தேர்தல் தொகுதியின் தேர்தல் அதிகாரி ஜெனி மெக்முல்லன், பங்களாதேஷின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் டொக்டர் சம்சுல் ஹூதா, கரீபியன் உள்ளுராட்சி அதிகாரச் சபையின் பில்பேர்ட் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 

 தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் அழைப்பின் பேரில் இவர்கள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட இலங்கை வந்துள்ளனர்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com