Home » , » கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் பணியாற்றுவர்; தேர்தல் திணைக்களம்

கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் பணியாற்றுவர்; தேர்தல் திணைக்களம்

வடக்கு, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்காக இலங்கை வந்திருக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி 12 நாடுகளிலிருந்து 30 சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்திருந்தனர். எனினும் தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்பின் பேரில் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் அனைத்து கண்காணிப்பாளர்களும் வட மாகாணத் திலேயே தேர்தல் கண்காணிப்பை ஆரம்பிப்பார்கள்.

இதற்கிணங்க இவர்கள் இன்று முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் தமது பணிகளை ஆரம்பிப்பார்கள்.

தேர்தல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் 20 கண்காணிப்பாளர் குழுவும் பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் தமாது மக்புல் என்பவரது தலைமையில் 09 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவுமே வட மாகாணத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்கவுள்ளன.

இதேவேளை பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 05 கண்காணிப்பாளர் களும் தற்போது இலங்கை வந்துள்ளனர். இவர்கள் கடந்த இரு தினங்களுக்குள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், ஏனைய தேர்தல் அதிகாரிகள், மற்றும் உள்நாட்டில் இயங்கம் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்துப் பேச்சு நடத்தியது

தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளினதும் களநிலவரம் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள நிலையிலேயே வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

மேலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அரசியல் கட்சிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

எதிர்வரும் 21ம் திகதியன்று நடைபெறும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலை கண்காணிப்பதற்காக ஐயாயிரம் பேர் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com