Home » » தேர்தல் வன்முறை தொடர்பில் 125 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 125 பேர் கைது

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 427 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைறெவுள்ள மாகாண சபை தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 378 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 49 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

 எனினும் அதிகளவிலான வன்முறைச் சம்பவங்கள் குருநாகல் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. அதன்படி 114 வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரரத்தில் ஈடுபடுத்தப் படுகின்றமை தொடர்பில் 87 முறைப்பாடுகளும் அரச வாகனங்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 58 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

 தேர்தல்கள் வன்முறைகள் தொடர்பில் இதுவரை தமக்கு 142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதுவிதமான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com