Home » » யாழ்ப்பாணத்தில் 35 வீத வாக்குகள் இதுவரை பதிவு! கிளிநொச்சியில் 40 வீதம் பதிவு! மன்னாரில் 30 வீதம் பதிவு!

யாழ்ப்பாணத்தில் 35 வீத வாக்குகள் இதுவரை பதிவு! கிளிநொச்சியில் 40 வீதம் பதிவு! மன்னாரில் 30 வீதம் பதிவு!

மாகாண சபை தேர்தலில் இன்று பிற்பகல் ஒரு மணி வரையான வாக்களிப்பின்படி யாழ்ப்பாணத்தில் 35 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
வடமாகாண தேர்தல்களில் இன்று பகல் 1.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி கிளிநொச்சியில் 40 வீத வாக்குகளும், முல்லைத்தீவில் 50 வீத வாக்குகளும், மன்னாரில் 35 வீத வாக்குகளும், வவுனியாவில் 40 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மக்கள் இதற்கு முந்திய தேர்தல்களை காட்டிலும் அதிகளவில் வாக்களிப்பில் பங்கேற்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தேர்தல் செயலகத்தின் பிற்பகல் ஒரு மணி வரையான கணக்கீட்டின்படி மாத்தளை 45, கண்டி, குருநாகல் 45, புத்தளம் 35 ஆகிய வீதங்களில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் மன்னார் மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. மன்னாரில் 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 75 ஆயிரத்து 737 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் 5 வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக 12 கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 160 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை மன்னாரில் 30 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com