Home » » மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்புகள் மந்தம்

மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்புகள் மந்தம்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்புகள் இன்று காலை ஆரம்பமானதுடன் வாக்களிப்பு மந்தமாகவே காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

முற்பகல் 10 மணி வரை வாக்களிப்புகள் மந்தமான நிலையில் இருந்த பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் பிற்பகல் மற்றும் மாலையில் வாக்களிப்பு சூடு பிடிக்க கூடும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்புகள் இன்று மாலை நான்கு மணிக்கு நிறைவடையவுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணம் மல்லாகம் வாக்களிப்பு நிலையத்திற்கு இடம்பெயர்ந்த நிலையில் உள்ள வாக்காளர்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டதை காணமுடிந்தது.

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் இன்று காலை வடக்கில் பாரதூரமான சம்பவங்கள் பற்றிய எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என பெப்ரல் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு உட்பட தேர்தல் நடைபெறும் மாகாணங்களில் சிறிய வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இன்று விநியோகிக்கப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை வடக்கில் இராணுவத்தினர் வாக்காளர்களை அச்சுறுத்தியமை தொடர்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

வடக்கில் பொதுநலவாய அமைப்பு மற்றும் தெற்சியாசிய அமைப்பு ஆகியவற்றின் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com