தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பெண் வேட்பாளர் வினுபானந்தகுமாரி வன்னேரிக்குளத்தில் தேர்தல் பிரசார பணிகளை முடித்துக்கொண்டு கிளிநொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஊற்றுப்புலம் பகுதியில் இரவு 11.00 மணியளவில் ஊற்றுப்புலம் பகுதியில் வினுபானந்தகுமாரியின் வாகனத்தை திடீரென மறித்த அரச தரப்பு வேட்பாளரான பொன்தம்பி தர்மசிறி வாகனத்திலிருந்த கூட்டமைப்பின் வேட்பாளர் வினுபானந்தகுமாரியையும், அவரது பெண் ஆதரவாளர்களையும் வெளியே இழுத்து விழுத்தியதோடு, பெண் வேட்பாளர் வினுபானந்தகுமாரியை உயிரோடு கொழுத்துவேன் என கொலை மிரட்டல் விடுத்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டித்தீர்த்தார்.
இராணுவத்தினருடன் வந்தே பொன்தம்பி இந்த வன்முறையில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், தேர்தல்கள் முறைப்பாட்டு திணைக்களத்திலும், கூட்டமைப்பின் தலைமையிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் அரச தரப்பு வேட்பாளர்கள் சுதந்திரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சுதந்திரமாக தேர்தல் பணிகளில் ஈடுபடமுடியாத நிலைமையையே இச்சம்பவம் வெளிப்படுத்துவதாக வேட்பாளர் வினுபானந்தகுமாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் எனது வெற்றியின் பின்னால் ஒட்டு மொத்த பெண்களும், வாக்காளர்களும் அணி திரள்வதை ஜீரணிக்க முடியாத அரச தரப்பு வேட்பாளர் தமது இராணுவ அடக்குமுறை பலத்தை பிரயோகிக்கும் செயலே இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நெருப்பாற்றை கடந்து வந்த நான் அரச தரப்பு மற்றும் இராணுவத்தினரின் எத்தகைய அடக்குமுறைக்கும், சலசலப்புகளுக்கும் அடி பணிய மாட்டேன் எனவும், கிளிநொச்சி மாவட்ட ஒட்டுமொத்த பெண்களின் அரசியல் அடையாளமாக தேர்தலில் நிற்கும் நான் அனைத்து பெண்களுக்காகவும் குரல் கொடுப்பதோடு, எமது அரசியல் இலக்கை அடையும் வரை ஓய்ந்து போய்விடப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment