Home » » கூட்டமைப்பு ஆதரவாளரின் வீடு வன்னிவிளாங்குளத்தில் எரிப்பு; பட்டப் பகல் வேளையில் அட்டூழியம்

கூட்டமைப்பு ஆதரவாளரின் வீடு வன்னிவிளாங்குளத்தில் எரிப்பு; பட்டப் பகல் வேளையில் அட்டூழியம்

மாந்தை கிழக்கு, வன்னி விளாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரான தொழிலாளி ஒருவரின் வீட்டை நேற்றுப் பட்டப் பகல் வேளையில் எரியூட்டி நாசமாக்கியுள்ளனர். 

 நேற்று பகல் 12.30 மணிக்கு வீட்டார் இல்லாத சமயம் பார்த்து இந்த அட்டூழியம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த அனைத்து உடைமைகளும் எரிந்து சாம்பலாகின. இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: மூன்று பிள்ளைகளின் தந்தையான அ.பூபாலன் கூலி வேலை வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி வீட்டில் தையல் வேலை செய்து வருபவர். அவர் தேர்தல் கண்காணிப்புக் குழுவான "பவ்ரல்' அமைப்பின் பணிக்காக அம்பாள்புரம் சென்றிருந்தார்

. கணவர் பூபாலன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் முகவராக நட்டாங்கண்டல் வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அவர்களின் 3 பிள்ளைகளும் விளையாடுவதற்கு வெளியில் சென்று விட்டனர். இந்தச் சமயத்திலேயே வி­சமிகள் வீட்டுக்குத் தீ வைத்துள்ளனர். வீட்டில் இருந்த சூரிய மின்கலம், தொலைக்காட்சி, தையல் இயந்திரம், வானொலி, உடுபுடைவைகள் மற்றும் உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பராகின. சுமார் 10 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துக்கள் அழிந்து விட்டதாகக் கூறப்பட்டது. சம்பவம் குறித்து பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com