மாகாண சபைத் தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களில் இருந்து தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களது நன்மை கருதி தேர்தல் இடம்பெறும் மாவட்டங்களிலிருந்து கிடைக்க பெற்றுள்ள விண்ணப்ப படிவங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வட மாகாணத்திலிருந்து விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேசிய அடையாள அட்டையினை துரிதமாக தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஆர். எம். எஸ். சரத் குமார குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்திலிருந்து நடமாடும் சேவை உட்பட மொத்தம் 33 ஆயிரத்து 843 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அதில் யாழ் மாவட்டத்திற்கு 31ஆயிரத்து 668 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வவுனியாவுக்கு 2ஆயிரத்து 296 அடையாள அட்டைகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4ஆயிரத்து 885 அடையாள அட்டைகள் மன்னார் மாவட்டத்திற்கு 5அயிரத்து 260 அடையாள அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது மேலும் மிகுதியாகவுள்ள விண்ணப்பங்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
எனினும் விண்ணப்பங்க மற்றும் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றில் காணப்படும் இலக்கங்களின் தெளிவின்மையே அடையாள அட்டை விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment