Home » » தமிழ்க் கூட்டமைப்பு வெல்வது உறுதி! சுமுகமான தேர்தல் குறித்தே எதிர்பார்ப்பு! நெதர்லாந்து தூதரிடம் யாழ். ஆயர்

தமிழ்க் கூட்டமைப்பு வெல்வது உறுதி! சுமுகமான தேர்தல் குறித்தே எதிர்பார்ப்பு! நெதர்லாந்து தூதரிடம் யாழ். ஆயர்

வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவது உறுதி என்று நேற்று யாழ்.வருகை தந்த நெதர்லாந்து தூதுவரிடம் யாழ்.ஆயர் தேமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அடித்துக் கூறியுள்ளார். இத் தேர்தல் சுதந்திரமானதும் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதே தமிழர்களுடைய விருப்பமாக உள்ளது. 

 எனவே தேர்தல் விடயங்களில் இராணுவத்தினருடைய தலையீட்டை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் கள நிலைவரங்களை அறிந்து கொள்வதற்கான இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் லூயில் டபிள்யூ.எம்.பெற் நேற்று யாழ்ப்பாணம் வந்தார். நேற்று மாலை 5.15 மணியளவில் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையைச் சந்தித்து தேர்தல் நிலவரம் மற்றும் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார். 

 இச் சந்திப்பின் போது நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள்? சுமுகமான தேர்தலுக்கு என்ன தடைகள் உள்ளன என ஆயரிடம் நெதர்லாந்து தூதுவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஆயர், மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. 

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமான தேர்தலாகும். கடந்த காலங்களில் இங்கு நடைபெற்ற தேர்தல்களை எடுத்துப் பார்த்தால் தமிழ் மக்களுடைய கட்சியே வெற்றிபெற்று வந்துள்ளது. இந்நிலையில் இம்முறையும் தமிழ் மக்களுடைய கட்சியே வெற்றி பெறுவது உறுதியான விடயம். தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் உள்ளது. தேவையற்ற தலையீடுகள் தொடர்ந்தால் தேர்தல் தொடர்பான மக்களின் ஆர்வம் குறையும். எனவே அவ்வாறான தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். எனவும் யாழ்.ஆயர் இந்தச் சந்திப்பில் மேலும் சுட்டிக்காட்டினார்


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com