வட மாகாண சபைத் தேர்தலை கண்காணிப்பதற்கென சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் எட்டுப் பேரை வரவழைத்துள்ளதாகவும் அவர்கள் கடந்த 15 ஆம் திகதியே வடக்கில் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும் பெப்ரல் அமைப்பானது வடக்கு மற்றும் வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தலை கண்காணிப்பதற்கென உள்நாட்டு 4500 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கு மற்றும் வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்புத் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரோஹன ஹெட்டியாராச்சி இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்;
நடைபெறவுள்ள வட மாகாண, சபை வடமேல் மற்றும் மத்திய, மாகாண சபைகளுக்கான தேர்தலை கண்காணிப்பதற்கான செயற்பாடுகளை பெப்ரல் அமைப்பு முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் இம்முறை வடக்குத் தேர்தலை கண்காணிப்பதற்கென வெளிநாடுகளிலிருந்து எட்டு கண்காணிப்பாளர்களை வரவழைத்துள்ளோம்.
இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எட்டு கண்காணிப்பாளர்களை பெப்ரல் அமைப்பு வரவழைத்துள்ளதுடன் அவர்களை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் வடக்கில் ஈடுபடுத்தியுள்ளது.
தேர்தல் முடியும்வரை இந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் வடக்கில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
இதேவேளை உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் 4500 பேரையும் பெப்ரல் அமைப்பு கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு 1300 உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment