வட மாகாணசபையின் 5 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 832 வாக்களிப்பு நிலையங்களில் நாளை சனிக்கிழமை தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
வட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான 10 மாவட்டங்களிலும் அமைக்கபட்டுள்ள 3712 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும்
வட மாகாணத்தைப் பொறுத்த மட்டில் ஐந்து மாவட்டங்களிலும் 832 வாக்களிப்பு நிலையங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 95 வாக்களிப்பு நிலையங்களும் மன்னார் மாவட்டத்தில் 70 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 வாக்களிப்பு நிலையங்களும் வவுனியா மாவட்டத்தில் 89 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டு தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை, 3712 வாக்களிப்பு நிலையங்களினதும் பாதுகாப்புக்காக 7500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கில் 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த சமார் 1500 மில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்களை தெரிவு செய்ய தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3785 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment