நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்க தரப்பினருக்கான பிரச்சார நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தினரும் இணைந்துள்ளனர்.
அரசாங்க கட்சியினருக்கு ஆதரவு வழங்கும முகமாக பல விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வுகளுக்கு பல பகுதிகளிலும் உள்ள மக்கள் வலுக்கட்டாயமாக ஏற்றிவரப்படுகின்றனர்.
மேற்படி நிகழ்வுகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறைவாக காணப்பட்டாலும், வேட்பாளர்களுடைய துண்டுப்பிரசுரங்கள் இராணுவத்தினால் விநயோகிக்கப்படுகின்றது.
மேலும் இந் நிகழ்வுகளுக்கு வருகைதரும் விருந்தினர்களும் வடக்குமாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தின் அனுசரணையுடன் வேட்பாளர்களாக்கப்பட்டவர்களுக்கு உரைகளில் ஆதரவு தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment