Home » » வட மாகாணசபைத் தேர்தலை நிறுத்தக் கோரி நீதிமன்றில் மனு தாக்கல்!

வட மாகாணசபைத் தேர்தலை நிறுத்தக் கோரி நீதிமன்றில் மனு தாக்கல்!

வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத்தடை விதிக்குமாறு கோரி சிங்கள ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) செயலாளர் ஜயந்த லியனகே நேற்று செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் வட மாகாண பிரதி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தும் அளவிற்கு வடக்கு நிலை சுமுகமாக இல்லை என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கில் முழுமையாகக் கண்ணிவெடி அகற்றப்படவில்லை,
யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்கள் இன்னும் தங்கள் பிரதேசங்களில் மீள்குடியேறவில்லை,
அதனால் வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்துவது நியாயமானதல்ல என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே முதலில் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்குமாறும் அதன் பின்னர் தேர்தல் நடத்த முழுத்தடை விதிக்குமாறும் மனுதாரர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com