நியாயமானதாகவும் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன . வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலாவது இடையூறுகள்
விளைவிக்கப்பட்டால் குறித்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார் .
வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் தமது வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும் என்று கோருகின்றோம் . காலை வேளையிலேயே சென்று வாக்களிப்பில் கலந்துகொள்ளவேண்டும் . யாருக்கும் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும் . உங்கள் வாக்களிப்புத் தொடர்பாக எவருக்கும் எந்தத் தகவலும் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார் .
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணையாளர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
அவர் அங்கு மேலும் கூறியதாவது
வட மாகாண சபை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பை இன்று காலை ஏழு மணிமுதல் மாலை நான்கு மணிவரை நீதியானதாகவும் நேர்மையானதாகவும் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .
இடையூறு விளைவித்தால்
வாக்களிப்பு ரத்து
தேர்தலுக்கான வாக்களிப்பு காலத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலாவது இடையூறுகள் விளைவிக்கப்பட்டால் வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும் . தேர்தல் முடிவுகளுக்கு தாக்கம் ஏற்படும் வகையில் இடையூறுகளோ , தடைகளோ ஏற்படுத்தப்பட்டால் வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும் . இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக நாங்கள் இருப்போம் .
மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தல் மக்களை வாக்களிப்பு நிலையத்துக்கு வர விடாமல் தடுத்தல் 9 மணிநேரம் வாக்களிப்பு இடம்பெறாமல் தடுத்தல் உள்ளிட்ட எந்த வகையில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும் . அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் . ஆனால் அவ்வாறு வாக்களிப்பை ரத்துச் செய்யக்கூடிய நிலைமை ஏற்படாது என்று நாங்கள் நம்புகின்றோம் . தற்போது வரை காணப்படுகின்ற நிலமைகளை பார்க்கும்போது அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாது என்பதே எமது நம்பிக்கையாகும் .
10 மணிக்கு தபால் மூல முடிவு
கேள்வி - முதலாவது தேர்தல் முடிவை எத்தனை மணிக்கு பெற முடியும் ?
பதில் - அவ்வாறு சரியான நேரத்தை என்னால் கூற முடியாது . ஆனால் தபால் மூல வாக்களிப்பு முடிவை இரவு 10 மணிக்கு முன்னர் வெளியிடலாம் . குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் தபால் மூல வாக்களிப்பு முடிவை 8 மணி முதல் 10 மணிக்குள் வெளியிட முடியும் . அங்கு தபால் மூல வாக்குகள் மிகவும் குறைவாகும் . எனினும் 22 ஆம் திகதி காலை ஆறு மணிக்கு முன்னர் மூன்று மாகாணங்களுக்கும் உரிய தேர்தல்கள் முடிவுகளை வெளியிட்டுவிடுவோம் . 23 ஆம் திகதி காலை ஆறு மணிக்கு முன்னர் விருப்பு வாக்கு முடிவுகளை வெளியிட்டுவிடுவோம் . தேர்தல் முடிவுகள் வரும்வரை பொறுததிருக்கவேண்டும் .
கேள்வி - தேர்தல் பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தை ஈடுபடுத்துவீர்களா ?
பதில் - பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தை ஈடுபடுத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை . தேவையான பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேசப்பட்டுள்ளது . ஆனால் மேலதிக பாதுகாப்பு குறித்த தேவை ஏற்பட்டால் அது குறித்து பரிசீலிப்போம் .
சீரற்ற கால - நிலை
கேள்வி - மலையகத்தின் சீரற்ற காலநிலை உள்ளது . வாக்களிப்பு சீரற்ற காலநிலையினால் தடை ஏற்பட்டால் ?
பதில் - காலை ஏழு மணிமுதல் மாலை நான்கு மணிவரை வாக்களிப்பதற்கு நேரம் உள்ளது . எனவே எவ்வாறாவது வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும் . எனினும் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது சீரற்ற காலநிலை நிலவினால் அதற்கு மாற்று ஏற்பாடுகளை முன்னெடுப்போம் . மற்றுமொரு தினத்தில் தேர்தல் வாக்களிப்பை நடத்த நடவடிக்கை எடுப்போம் .
கேள்வி - தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் அறிக்கைகளை மதிப்பிடுவீர்களா ?
பதில் - கண்காணிப்பு அமைப்புக்களின் அறிக்கைகளை மதிப்பிடுவோம் . அனைத்து அமைப்புக்களும் முன்வைக்கும் அறிக்கைகள் 100 வீதம் சரியாக இருக்காது . ஆனால் பெப்ரல் போன்ற அமைப்புக்கள் முன்வைக்கும் அறிக்கைகள் பெரும்பாலும் சரியாகவே அமையும் .
கைத் - தொ - லை - பேசி
இதேவேளை இம்முறை வாக்களிப்பவர்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று கைத்தொலைபேசியை வெளியே எடுத்தால் அதனை பறிமுதல் செய்துவிடுவோம் . கைத்தொலைபேசியை பையினுள் வைத்திருக்கலாம் . வாக்களிப்பு நிலையத்துக்குள்ளே வைத்து அதனை வெளியில் எடுத்தால் அதனை எடுத்துவிடுவோம் .
கேள்வி - வாக்களிப்பு நிலையத்துக்கு யார் செல்ல முடியும் ?
பதில் - தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் செல்லலாம் . மேலும் அரசியல் கட்சிகளின் இரண்டு பிரதிநிதிகள் வேட்பாளர்கள் , அனுமதியளிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் , கட்சிகளின் செயலாளர்கள் , பொலிஸார் ஆகியோர் செல்ல முடியும் . அதற்கு மேலதிகமாக அரசியவ்வாதிகள் செல்ல முடியாது . செல்வற்கு அனுமதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வெளியே நிறுத்திவிட்டு செல்லவேணடும் .
பிளாஸ்டிக் பெட்டிகள்
கேள்வி - இம்முறை பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றதா ?
பதில் - பரீட்சார்த்தமாக இதனை செய்கின்றோம் . காரணம் மரம் வெட்டுவது எங்களுக்கு பிடிக்காது . தேர்தல் காரணமாக ஏற்கனவே சூழல் மாசடைகின்றது . எனவே மரங்களில் அமைந்த பெட்டிகளையும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . அதனால் பிளாஸ்டிக் பெட்டிகளை ஆரம்பித்துள்ளோம் . இம்முறை முதற்கட்டமாக 228 பெட்டிகளே பயன்படுத்தப்படும் . யாழ்ப்பாணத்துக்கு 60 பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன .
கேள்வி - மக்களுக்கு என்ன செய்தியை விடுக்க விரும்புகின்றீர்கள் ?
பதில் - வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் தமது வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும் என்று கோருகின்றோம் . காலை வேளையிலேயே சென்று வாக்களிப்பில் கலந்துகொள்ளவேண்டும் . மாலை நான்கு மணிவரை காத்திராமல் காலையிலேயே வாக்களிப்பது சிறந்ததாக அமையும் . யாருக்கும் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும் . உங்கள் வாக்களிப்புத் தொடர்பாக எவருக்கும் எந்தத் தகவலும் பெற முடியாது .
வாக்களிப்பு உங்கள் உரிமை
வாக்களிப்பு என்பது மக்களின் உரிமையாகும் . அது ஒரு அதிகாரமாகும் . அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயத்திலேயே வாக்களிப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது . மக்கள் வாக்களிக்காவிடின் அரசாங்கமே இருக்க முடியாது . எமக்கு வாக்களிப்பதினால் என்ன நன்மை என்று யாரும் சிந்திக்கக்கூடாது . வாக்களிக்கவேண்டும் . அந்த செயற்பாட்டில் பங்கெடுக்கவேண்டியது அவசியமாகும் .
தமது வாக்குகள் முறைகேட்டுக்கு உட்படும் என்று வாக்காளர்கள் பயப்படவேண்டாம் . அவ்வாறு எந்தவிதமான முறைகேட்டுக்கும் தேர்தல் திணைக்களம் இடமளிக்காது . மூன்று மாகாணங்களிலும் நீதியான தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம் . எனவே தவறாது வாக்களிப்பில் கலந்துகொள்ளவேண்டும் .
வாக்காளர் அட்டை கட்டாயமில்லை
இதேவேளை வாக்களிப்பதற்கு செல்லும்போது வாக்காளர் அட்டை கிடைத்திருந்தால் அதனை எடுத்துச் செல்லவும் . வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயமானதல்ல . இல்லாவிடினும் வாக்க ளிக்க செல்ல முடியும் . ஆனால் வாக் கா ளர் இடாப்பில் பெயர் உள்ளடங்கியிருக்கவேண்டும் .
அடையாள அட்டை முக்கியம்
எனினும் தேர்தல் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆள் அடை யாளத்தை உறுதிபடுத்தும் அடையாள அட்டையை வாக்காளர்கள் கட்டாயம் எடுத்துச் செல்லவேண்டும் . ஆள் அடையாளத்தை உறுதிபடுத்தாமல் வாக்க ளிக்க முடியாது . தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தற்போதைக்கு வாக்கா ளர்கள் தற்காலிக அடையாள அட்டையை பெற்றிருக்கவேண்டும் . இல்லாவிடின் ஒன்றும் செய்ய முடியாது .
சட்ட நடவடிக்கை
இது இவ்வாறு இருக்க குறிப்பிட்ட தொகை வேட்பாளர்கள் இதுவரை தமது சொத்துப் பிரகடனத்தை செய்யாமல் உள்ளனர் . தேர்தல் முடிந்ததும் அவர்களுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்வோம் . நீதிமன்றம் சென்றால் தண்டப்பணம் குறைவாகவே விதிக்கப்படும் . எனினும் சட்ட நடவடிக்கை எடுப்போம் .





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment