வாக்கெண்ணும் நிலைய மாகச் செயற்படவுள்ள யாழ். மத்திய கல்லூரியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சிவன்சுதன் அச்சுதன் தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்குரிய சகல ஏற்பாடுகளும் யாழ்.மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாகத் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு வெளியே யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளன.
அத்துடன் இந்தத் தேர்தலின் போது முதன்முறையாக 43 வாக்களிப்பு நிலையங்களில் பிளாஸ்ரிக் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப் பெட்டிகள், யாழ். மத்திய கல்லூரியிலிருந்து எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களால் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
526 வாக்களிப்பு நிலையங்களுக்கும் பஸ்களின் மூலம் வாக்களிப்பு பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடனேயே எடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment