Home » , » ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

வட மாகாண சபையில் 2014ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் வரவு – செலவுத்திட்ட அமர்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகி மூன்று தினங்களாக இடம்பெற்று வந்தன. 

 முதல் நாள் அமர்வின்போது, ஆளுநர் செயலகமும் பொதுச்சேவை ஆணைக்குழுவும், பேரவைச் செயலகம், முதலமைச்சர் செயலகம் ஆகியவற்றுக்கான வரவு – செலவுகள் விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டன. 

 நேற்றைய அமர்வின்போது கல்வி, கலை, பண்பாட்டு, விளையாட்டு அமைச்சு மற்றும் சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கான வரவு – செலவுகளும் விவாதங்களின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இன்றைய அமர்வின்போது, மீன்பிடி, வர்த்தகம், வாணிபம், போக்குவரத்து அமைச்சு மற்றும் விவசாயம், கமநலசேவைகள், கால்நடை, நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான வரவு – செலவுகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 

 இதேவேளை, வடமாகாண சபையின் அடுத்த அமர்வு 2014 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி நடைபெறும் என சபைத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com