தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில் அவசர அவசரமாக நியமிக்கப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் முறைகேடுகள் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாணசபை அமர்வின் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் வடமாகாணசபையில் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்ட ரீதியில் வழங்கப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் முறைகேடுகள் காணப்படுகின்றது. நீண்டகாலமாக யுத்த சூழலுக்கு மத்தியிலும் தொண்டர் சிற்றூழியர்களாக பணியாற்றிய பலருக்கு நியமனங்கள் வழங்கப்படாது அரசியல் செல்வாக்கு காரணமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வதிவிடச் சான்றிதழ்கள் கவனத்தில் கொள்ளப்படாதும் மோசடியாக பெறப்பட்ட வதிவிடச் சான்றுகளின் அடிப்படையிலும் இந் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தை சாராத வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் அமைச்சர்களின் ஆதரவுடன் வடபகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு முறைகேடான அரச நியமனம் ஆகும்.
இது தேர்தலை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எமது பகுதியைச் சேர்ந்த பல காலமாக தொண்டர்களாக பணியாற்றிய பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந் நியமனம் தொடர்பாக உடனடியாக விசாரணை குழு அமைக்கப்பட்டு உண்மைகள்
கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இதற்கு பதிலளித்து பேசிய வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment