கறுப்பினத்தவர்களின் இரும்பு மனிதன் என வர்ணிக்கப்படும் மாமனிதன் நெல்சன் மண்டேலாவின்
மறைவையொட்டி வடமாகாணசபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,
சுதந்திரத்தின் குரல் , மனிதாபிமானத்தின் குரல் , சமாதானத்தின் குரல் ஓய்ந்து விட்டது . மகாத்மா காந்திக்குப் பிறகு உலகெங்கணும் உள்ள மக்கள் உளமார இரங்கும் மறைவு நெல்சன் மண்டேலாவினுடையதே என்றால் அது மிகையாகாது .
27 வருட சிறைவாசத்தின் பின்னரும் தன்னைச் சிறையில் தள்ளியவர்களை மன்னித்து நாட்டுக்கு எது நன்மை பயக்குமோ அதை மட்டும் சிந்தித்துச் செயலாற்றிய நெல்சன் மண்டேலா , உலக மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு .
இன்று தென்னாபிரிக்கா உலக நாடுகளில் மதிப்பு மிக்க ஒரு நாடாக இருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் நெல்சன் மண்டேலாவே !
அவரின் வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த கடமை கண்ணியம் , பொறுமை , கட்டுப்பாடு , பழிவாங்கும் எண்ணமற்ற அவரின் குணாதிசயங்கள் எம்மால் உய்த்துணர்ந்து எமது வாழ்க்கையில் உள் நுழைக்க வேண்டிய உன்னத குணங்களாவன .
வாழ்க அவர் நாமம் ! அவர் ஆத்மா இறைவனடி சேருவதாக !
சீ.வி. விக்னேஸ்வரன்
முதலமைச்சர் ,
வடமாகாணசபை .






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment