Home » , , » வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. சந்திரசிறி.

வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. சந்திரசிறி.

வடக்கு மாகாண சபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் , சில புதிய திணைக்களங்களை
உருவாக்க முயன்றுள்ளதாகவும் இது இலங்கை அரசியலமைப்புக்கு விரோதமானது என வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார் .

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் ,

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும் நாட்டின் அரசியலமைப்பையும் , தேசிய கொள்கையையும் மதித்து செயற்பட வேண்டும் .

வடக்கு மாகாணசபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் புதிய திணைக்களங்களை உருவாக்கும் திட்டங்களை முன்மொழிந்துள்ளமை இலங்கை அரசியலமைப்புக்கு எதிரானது .
வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு நான் ஒப்புதல் வழங்கியிருந்தேன் .

அத்துடன் , அரசியலமைப்புக்கு இணங்கவே மாகாணசபையால் அதிகாரசபைகளை உருவாக்க முடியும் என்ற குறிப்பையும் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன் .

அவர்கள் வீடமைப்பு திணைக்களம் மற்றும் போக்குவரத்து திணைக்களம் என்பனவற்றை உருவாக்க முயற்சிக்கின்றனர் .
இலங்கை அரசியலமைப்பிற்கு அமைவாக உறுப்பினர்களுக்கான தேசிய கொள்கைப்படியும் செயற்படும்படி அவர்கள் எதிர்பார்க்கப்படுவதாக அவர்களுக்கு கூறிக் கொள்ள வேண்டியுள்ளது .

வடக்கு மாகாணசபை திணைக்களங்களை உருவாக்க முயற்சிக்கும் போது அரசியலமைப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் .
சில நிர்வாக அலகுகள் , கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபரின் , மாகாண ஆளுநரின் , மாகாண முதல்வரின் அனுமதி தேவை .

அவர்களால் மட்டுமே , போக்குவரத்து , வீடமைப்பு அதிகார சபைகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளேன் .

அவர்களின் வரவு செலவுத்திட்ட விவாதம் முழுவதும் வடக்கு மாகாணசபைக்கு ஒரு சிவிலியன் ஆளுநர் தேவை என்பதை மையப்படுத்தியதாகவே இருந்தது .

ஒரு இராணுவ பின்னணி கொண்ட ஆளுநர் தேவையில்லை என்கின்றனர் .

இராணுவ அல்லது சிவில் ஆளுனர் எவராயினும் அரசியலமைப்பு படியே செயற்பட முடியும் .
அவர்கள் சொல்வதற்கு ஆமாம் என்று தலையாட்டக் கூடிய , மாகாண சபை பற்றிய எந்த அறிவுமில்லாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் தான் அவர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள் என்றும் , அவர் தெரிவித்துள்ளார் .

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com